தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாங்காய் விளைச்சலும், விலையும் சரிவு:  நிவாரணத்துக்கு எதிர்பார்ப்பு 

மாங்காய் விளைச்சலும், விலையும் சரிவு:  நிவாரணத்துக்கு எதிர்பார்ப்பு 

மாங்காய் விளைச்சலும், விலையும் சரிவு:  நிவாரணத்துக்கு எதிர்பார்ப்பு 


UPDATED : மே 24, 2026 06:50 PM

ADDED : மே 24, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 06:50 PM ADDED : மே 24, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைச்சலும், மாம்பழ கூழ் தயாரிப்புக்கு கொள்முதல் செய்யாததால், விலையும் சரிந்து மா சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஜல்லிபட்டி, மானுப்பட்டி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், 1,500 ெஹக்டேருக்கும் அதிகமான பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பங்கனப்பள்ளி, செந்துாரா, அல்போன்சா, இமாம்பசந்த் உள்ளிட்ட பல ரக மாம்பழங்கள், கோடை காலத்தில் அறுவடை செய்யப்படும். ஆண்டின் பிரதான அறுவடை சீசனாக, ஏப்., மே மாத சீசன் உள்ளது.

இந்த சீசனில் கிடைக்கும் வருவாயே, மா சாகுபடியாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்தாண்டு வழக்கத்துக்கு முன்பாகவே கோடை வெயில் தாக்கம் துவங்கியது.

இதனால், மா மரங்களில் பூ மற்றும் பிஞ்சு உதிர்தல் ஏற்பட்டது. குறைந்தளவு பிடித்த பிஞ்சுகளும் அதிக வெப்பத்தால், போதிய திரட்சி இல்லாமல், வெம்பி விட்டது. குறைந்தளவு விளைந்த மாம்பழங்களுக்கும் விலை கிடைக்கவில்லை.

மா சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக ஏக்கருக்கு, 10 டன் வரை மாம்பழம் விளைச்சல் கோடை சீசனில் கிடைக்கும். இந்தாண்டு ஏக்கருக்கு, 3 டன்னாக விளைச்சல் குறைந்து விட்டது.

திரட்சி இல்லாத மாம்பழங்களை, மாம்பழ கூழ் தயாரிப்பாளர்கள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால், செந்துாரம் ரக மாம்பழம் விலை கிலோ, 15-20 ரூபாயாக சரிந்துள்ளது.

முன்பு கிலோவுக்கு, 40 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. விளைச்சலும், விலையும் சரிந்துள்ளதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலான விவசாயிகள் மாற்றுச்சாகுபடிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us