/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானாவாரி கோதுமை சாகுபடி மானியத்துக்கு எதிர்பார்ப்பு
/
மானாவாரி கோதுமை சாகுபடி மானியத்துக்கு எதிர்பார்ப்பு
மானாவாரி கோதுமை சாகுபடி மானியத்துக்கு எதிர்பார்ப்பு
மானாவாரி கோதுமை சாகுபடி மானியத்துக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஆக 25, 2025 09:19 PM
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட கணபதிபாளையம், ராகல்பாவி, வெனசப்பட்டி, பண்ணைக்கிணறு, அந்தியூர், பொட்டையம்பாளையம், விருகல்பட்டி உட்பட கிராமங்களில், கரிசல்மண் விளைநிலங்கள் உள்ளன.
இங்கு, மானாவாரியாக கொண்டைக்கடலை, கொத்தமல்லி போன்ற சாகுபடிகளில், ஊடுபயிராக கோதுமை பயிரிடப்பட்டு வந்தது. அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சாகுபடி, பல்வேறு காரணங்களால், முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.
முன்பு, சம்பா கோதுமை எனப்படும் இந்த ரகம் உடுமலை பகுதியில் பரவலாக பயிரிடப்பட்டு வந்தது. முன்பு வேளாண்துறை சார்பில், சிறப்பு திட்டத்தின் கீழ், கோதுமை விதைகள், வினியோகிக்கப்பட்டது. இத்திட்டத்தை நடப்பு சீசனில், செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.