/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு
/
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு
ADDED : செப் 05, 2025 09:38 PM
உடுமலை, ; தாராபுரம் ரோடு - ஐயப்பன் கோவில் ரோடு சந்திப்பு பகுதியில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது; சந்திப்பு மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிகிறது. நகரப்பகுதியில், இந்த நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, நகரப்பகுதியில், சென்டர்மீடியன் அமைத்துள்ளனர். இந்த ரோட்டில், ஐயப்பன் கோவில் ரோடு சந்திக்கிறது. பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இணைய ஐயப்பன் கோவில் ரோட்டை பயன்படுத்துகின்றனர்; அதிகளவு கடைகளும் இந்த ரோட்டில் உள்ளன.
எனவே, மாநில நெடுஞ்சாலை மற்றும் ஐயப்பன் கோவில் ரோடு சந்திப்பு பகுதியில், காலை, மாலை நேரங்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்களும் அதிகளவு வருவதால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
சந்திப்பு பகுதி குறுகலாக இருப்பதால், கார் மற்றும் லாரிகள 'யு டர்ன்' செய்யும் போது, மாநில நெடுஞ்சாலையில் பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. அப்போது, நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சந்திப்பு பகுதியில் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, வேகத்தடை உள்ளிட்ட கட்டமைப்புகளை மாநில நெடுஞ்சாலையில் ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.