/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
அரசு கல்லுாரியில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
அரசு கல்லுாரியில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
அரசு கல்லுாரியில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஆக 21, 2025 08:20 PM
உடுமலை; உடுமலை, அரசுக்கல்லுாரியில், போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள், முறையாக செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு பணிகளுக்கு, போட்டித் தேர்வுகளின் அடிப்படையில், பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்தேர்வுகளில் பங்கேற்பதில், இளம் தலைமுறையினரின் பங்கு அதிகமாகவே உள்ளது.
இவ்வாறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு, அரசுக்கல்லுாரிகளில் தனி பயிற்சி வகுப்புகள் இல்லை. பல மாணவர்கள் திறமை இருப்பினும், போதிய பயிற்சியின்மையால் தேர்வுகளில் தோல்வி அடைகின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் போன்று மாவட்டங்களின் மையப்பகுதிகளில், சில இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. உடுமலை சுற்றுப்பகுதியிலும், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாட்களில் நடக்கிறது.
இருப்பினும், கிராமப்புற பகுதி மக்கள், இப்பயிற்சி எடுத்துக்கொள்ள, விடுமுறை நாட்களிலும் மீண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
உடுமலை அரசு கலைக் கல்லுாரிக்கு, போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த யு.ஜி.சி., யின் சார்பில், ஒருமுறை நிதி வழங்கப்பட்டது. இதனால், இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லுாரியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, பல தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டனர்.
பல்வேறு போட்டித்தேர்விற்கு, மாணவர்களை தயார் செய்யும் மைய விரிவுரையாளர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்களைக்கொண்டு இவ்வகுப்புகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த கல்வியாண்டிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து, இதுவரை ஏமாற்றத்தில் உள்ளனர்.
மீண்டும் உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செயல்படுத்த வேண்டுமென பெற்றோர், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.