/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றுப்பாலத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
ஆற்றுப்பாலத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 01, 2025 07:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த பாலத்தில், சுவர்கள் விரிசல் விட்டும், ரோடு சேதமடைந்தும், செடிகள் வளர்ந்தும் காணப்படுகின்றன. எனவே, அமராவதி ஆற்றுப்பாலத்தை பாதுகாக்கும் வகையில், சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.