/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அடிப்படை கல்வி குறித்து விளக்கம்
/
எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அடிப்படை கல்வி குறித்து விளக்கம்
எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அடிப்படை கல்வி குறித்து விளக்கம்
எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அடிப்படை கல்வி குறித்து விளக்கம்
ADDED : மே 15, 2025 11:17 PM
உடுமலை, ;உடுமலை வட்டார அளவில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு, பயிற்சி வகுப்பு நடந்தது.
ஒவ்வொரு வட்டாரத்திலும், 15 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படையான கல்விஅறிவு பெறாதவர்களுக்கான திட்டமாக, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், வட்டார அளவில் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவை கற்போர் மையமாக மாற்றப்படுகிறது.
அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வயது முதிர்ந்த அடிப்படை கல்வி அறிவு பெறாதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கல்வி கற்றுதரப்படுகிறது. இறுதியில், கற்போருக்கான தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இப்பணிகளுக்கென தன்னார்வலர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கியதும், இத்திட்டத்தின் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். உடுமலை வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது. போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென பாடத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. பாடமும் படமும், சமூகம், நிர்வாகம், வாழ்வியலும் ஆளுமையும், இயற்கையோடு இணைவோம், ஊரும் ஏரும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அடிப்படை கணிதம் குறித்த பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, அடிப்படையான சட்டங்கள், அரசின் திட்டங்கள், கடிகாரம் பார்த்து நேரம் கூறுவது, ஆங்கில மாதங்களை அறிவது, நாள்காட்டி, பருவங்களை கூறுவது, குறிப்பாக பெயரை எழுதுவதற்கும், படிப்பதற்குமான பயிற்சி, உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், பயணசீட்டு பெறுவதற்கு உரிய கட்டணம் செலுத்துவது, அதற்கான மீதம் பெறுவது, ரயில் முன்பதிவு செய்வது, வங்கிகளில் படிவங்கள் பூர்த்தி செய்வது, அஞ்சலகத்தில் பணம் போடுவது, பல்வேறு மோசடிகள் குறித்த விழிப்புணர்வு, கிராமங்களில் நடக்கும் கூட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பாடங்கள் உள்ளன. இதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.