ADDED : நவ 01, 2024 12:38 AM
அ நிறம் | அளவு
பாண்டியன் நகர், பொன்மலர் வீதியில் சட்டவிரோதமாக குடியிருப்பில் தயாரிக்கப்பட்ட பெரிய நாட்டு வெடிகள், கடந்த மாதம், 8ம் தேதி வெடித்ததில் நால்வர் பலியாயினர்.
சுற்றியுள்ள வீடுகள் சேதமடைந்தன. வெடி மருந்து விபத்து தொடர்பாக, திருமுருகன்பூண்டி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வழக்கில், முக்கிய நபராக உள்ள சூலுாரை சேர்ந்த சரவணகுமார், 42 என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.
