/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பீனிக்ஸ் பறவை போல ஏற்றுமதியாளர் மீள்வர்'
/
'பீனிக்ஸ் பறவை போல ஏற்றுமதியாளர் மீள்வர்'
ADDED : ஆக 09, 2025 11:39 PM

திருப்பூர் : ''பீனிக்ஸ் பறவை போல, அனைத்து பிரச் னைகளிலும் இருந்தும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மீண்டெழுவர்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
பின்னலாடைகளை ஏற்றுமதிக்கு அனுப்பும் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில், 'லாஜிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ்' என்ற வழிகாட்டி கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வெளிநாட்டு வர்த்தக பிரிவு இணை இயக்குனர் ஆனந்த் மோகன்மிஸ்ரா, கையேட்டை வெளியிட்டார். பொதுச்செயலாளர் திருக்குமரன் வரவேற்றார்.
பொருளாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் ஆனந்த், மேழிசெல்வன், ரத்தினசாமி, பிரேம் அகர்வால் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், ''அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பான, ஏற்றுமதியாளர் கோரிக்கையை, மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதாக, வெளிநாட்டு வர்த்தக பிரிவு இணை இயக்குனர் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறு பேர் கொண்ட குழுவினர், 'லாஜிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ்' என்ற வழிகாட்டி கையேட்டை தயாரித்துள்ளனர். துாத்துக்குடி சரக்கு கையாளும் நிறுவனமும் பல்வேறு வகையில் உதவியுள்ளது'' என்றார்.
தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வரும், அதிகப்படியான சுங்கவரி என்பது தற்காலிகமானது தான்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், பல்வேறு சவால்களை சந்தித்து, வெற்றியடைந்து வருகிறோம். அதன்படி, 'பீனிக்ஸ்' பறவை போல, அனைத்து பிரச்னைகளில் இருந்தும் மீண்டு வருவோம்.
ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறிய தவறுகளும், இழப்புகளும் ஏற்படுவதை தடுக்கவே, 'லாஜிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ்' என்ற வழிகாட்டி கையேடு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
முன்னதாக, கையேடு உருவாக்கத்தில் ஈடுபட்ட சுரேஷ், கார்த்திகேயன், ஸ்ரீனிவாசன்,ராமஜெயம், ரமேஷ் கண்ணன், செல்லமுத்து ஆகியோர், நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பெண் தொழில்முனைவோர் துணை குழு தலைவர் சுமித்தா ரோஷன் உட்பட, ஏற்றுமதியா ளர்கள் பங்கேற்றனர்.
பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்
விரைவில் கருத்தரங்கு
இந்தியா - பிரிட்டன் இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தப்படும். குறிப்பாக, ஏற்றுமதியாளர் வசதிக்காக, திருப்பூரில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படும். ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து செயல்முறையில் ஈடுபடும் அனைவ ருக்கும், 'லாஜிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ்' கையேடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஆனந்த் மோகன் மிஸ்ரா,
வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர்.
ஏற்றுமதியாளர் சங்கத்தின்
பாராட்டத்தக்க முயற்சி
இதுவரை, லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான வழிகாட்டி கையேடு தயாரிக்கப்படவில்லை; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய முயற்சி பாராட்டுக்குரியது. வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனராக ஆனந்த் மோகன் மிஸ்ரா பதவியேற்ற நாளில் இருந்து, நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார்.
- சக்திவேல்,
கவுரவ தலைவர்,திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.