/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி... இலக்கு!: 2030ல் எட்டப்போவது நிச்சயம் ஆடை ஏற்றுமதியாளர்கள் சபதம்
/
லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி... இலக்கு!: 2030ல் எட்டப்போவது நிச்சயம் ஆடை ஏற்றுமதியாளர்கள் சபதம்
லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி... இலக்கு!: 2030ல் எட்டப்போவது நிச்சயம் ஆடை ஏற்றுமதியாளர்கள் சபதம்
லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி... இலக்கு!: 2030ல் எட்டப்போவது நிச்சயம் ஆடை ஏற்றுமதியாளர்கள் சபதம்
ADDED : பிப் 15, 2026 06:17 AM

திருப்பூர்: ''பின்னலாடை ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை, 2030ல் நிச்சயம் அடைவோம்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றி வருவது ஜவுளித்தொழில்; குறிப்பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நாட்டின் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு கருவியாகவும் செயல்படுகிறது. தற்போதைய நி லவரப்படி, உலக அளவிலான ஆடை வர்த்தகத்தில், நமது நாட்டின் பங்களிப்பு, 4 சதவீதத்துக்கும் குறைவு.
இந்தியா, ஒன்பது நாடுகளுடன் ஏற்கனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த வார நிலவரப்படி, 38 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒவ்வொரு ஏற்றுமதியாளரின் கனவாக இருந்தது; அது, 12 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியிருக்கிறது; விரைவில் கைகூடவும் போகிறது. பிரிட்டன், ஓமன், நியூசிலாந்து போன்ற நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கையெழுத்தாகிவிட்டது. சட்டப்பூர்வ அங்கீகாரத்துக்கு பிறகு, நடைமுறைக்கு வரப்போகிறது.
ஆட்டம் கண்டிருந்த அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கும், சுமூக தீர்வு கிட்டியுள்ளது. விரைவில், இடைக்கால ஒப்பந்தம் என்பது, வர்த்தக ஒப்பந்தமாக மலரப்போகிறது. இது, திருப்பூருக்கு எப்படியெல்லாம் நன்மை பயக்கும் என்று, தொழில்துறையினர் தீவிரமாக ஆலோசிக்க துவங்கிவிட்டனர். திருப்பூரை நாடி வரும் வாய்ப்புகளை ஆர்டர்களாக வசப்படுத்த, தேவையான நடவடிக்கைகளையும் திருப்பூர் துவக்கிவிட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலர் திருக்குமரன் கூறுகையில், ''2030ம் ஆண்டில், நிச்சயமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை திருப்பூர் அடையும். அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது'' என்றார்.
அபார வளர்ச்சி பெறும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள், பின்னலாடை ஏற்றுமதியில் வசந்தகாலம் போன்றது. ஏற்கனவே,கடும் போட்டியை சமாளித்து, இந்திய ஏற்றுமதி சீரான வளர்ச்சியில் இருக்கிறது. இனிமேல், வரிச்சலுகை கிடைக்கும் என்பதால், ஐரோப்பா, பிரிட்டன் வர்த்தகம் அடுத்த நிதியாண்டில் அபார வளர்ச்சி பெறும்.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஓரிரு மாதங்களில் கையெழுத்தாகிவிடும். அதன்படி, அடுத்த நிதியாண்டு நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் அபார வளர்ச்சி கிடைக்கும்.
அதைக் கணக்கிட்டே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஏற்றுமதி வர்த்தகம் இருமடங்கு உயரும் என்று தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம்விரிவாக்கப்பட்ட தொழிற்கூடங்களில், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை பெறுவர்.
- திருக்குமரன், பொதுச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.

