/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை விரிவாக்க பணி விரைவு
/
நெடுஞ்சாலை விரிவாக்க பணி விரைவு
ADDED : பிப் 03, 2024 01:04 AM

பல்லடம்;பல்லடம் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
பல்லடம், கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.
முதல் கட்டமாக, பல்லடம் துவங்கி காரணம்பேட்டை வரை, 12 கி.மீ., துாரமுள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, தற்போது, பல்லடம் துவங்கி- வெள்ளகோவில் வரை 47 கி.மீ., துாரம் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி உள்ளது. தற்போது,10 மீ., உள்ள இந்த ரோடு, 275 கோடி ரூபாய் மதிப்பில், 19.2 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஓராண்டுக்குள் சாலை விரிவாக்க பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது, ரோடு விரிவாக்க பணிகள் துவங்கி துரித கதியில் நடந்து வருகின்றன.
விரைவு ஏன்?
இம்மாதம் 18ம் தேதிக்கு பின் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடக்கும் பகுதி, தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால், அதிக வாகன போக்குவரத்து நெரிசல், இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டே, விரிவாக்க பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, பல்லடம் பனப்பாளையத்தில் துவங்கி விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

