/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.3 லட்சம் வழிப்பறி; மூன்று பேர் கைது
/
ரூ.3 லட்சம் வழிப்பறி; மூன்று பேர் கைது
ADDED : பிப் 14, 2024 01:42 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.எம்.எஸ்., நான்காவது வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 47. இவர் காஸ் நிறுவனத்தில் சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார்.
கடந்த, 4ம் தேதி மாலை பொங்குபாளையத்தில் உள்ள காஸ் குடோனில், 53 சிலிண்டர்களை எடுத்து கொண்டு போயம்பாளையம், காளிபாளையம் மற்றும் பெருமாநல்லுார் ஆகிய பகுதிகளில் சப்ளை செய்துள்ளார்.
இரவு காஸ் குடோனுக்கு சென்று உடன் பணிபுரியும் நபர்களிடமிருந்து, பெறப்பட்ட வசூல் தொகை 3 லட்சத்து, 17 ஆயிரத்து, 619 ரூபாயை பையில் வைத்து கொண்டு பைக்கில், தனது அலுவலகத்துக்கு சென்றார்.
பி.என்., ரோடு அண்ணா நகர் அருகே சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் பணப்பையை பறித்து கொண்டு தப்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர்.
அதில், பணத்தை வழிப்பறி செய்த, போயம்பாளையம் - கணபதி நகரை சேர்ந்த விஷ்ணு, 24, கங்கா நகர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன், 22 மற்றும் மும்மூர்த்தி நகரை சேர்ந்த சதீஷ், 23, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மூன்று பேரிடம் இருந்து, 2.17 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது.

