தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடுதல் கட்டணம் வசூல்; பஸ்கள் சிறைபிடிப்பு

கூடுதல் கட்டணம் வசூல்; பஸ்கள் சிறைபிடிப்பு

கூடுதல் கட்டணம் வசூல்; பஸ்கள் சிறைபிடிப்பு


ADDED : ஆக 24, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஆக. 25–

அரசு பஸ்களை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வலியுறுத்தி, ஊத்துக்குளியில் தனியார் பஸ்களை சிறைபிடித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்குளியில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ்சில் 24 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் 28 முதல் 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பெருந்துறை, திருப்பூர் வழித்தடங்களிலும் 3 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, டி.ஒய்.எப்.ஐ., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்த இரண்டு தனியார் பஸ்களை நேற்று காலை சிறைபிடித்தனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்; பயணிகளுக்கு முறையான டிக்கெட் வழங்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

ஊத்துக்குளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை விடுவித்தனர்.

ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கவின்ராஜ் கூறுகையில், ‘‘கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில், கடந்த இரண்டு நாட்களில் ஏழு தனியார் பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்,’’ என்றார்.

–––

தனியார் பஸ்களை சிறைபிடித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us