தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எர்ணாகுளம் - முஸாபர்பூர் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி  

 எர்ணாகுளம் - முஸாபர்பூர் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி  

 எர்ணாகுளம் - முஸாபர்பூர் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி  


ADDED : ஏப் 16, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: எர்ணாகுளம் - முஸாபர்பூர் கோடை சிறப்பு ரயில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை, 12ல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல், முன்பதிவு அதிகரித்ததால் பெட்டி எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக பிப். மாதம் எர்ணாகுளம் - பீஹார் மாநிலம், முஸாபர்பூர் இடையே சிறப்பு ரயில் (எண்: 06085) அறிவிக்கப்பட்டது. 12 படுக்கை வசதி, நான்கு ஏ.சி. பெட்டி உட்பட, 21 பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கி வந்தது. தொடர்ந்து முன்பதிவு அதிகரிப்பதால், மார்ச் இறுதியில் கோடை சிறப்பு ரயிலாக மாற்றி அறிவிக்கப்பட்டது.

தற்போதும் இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரிப்பதால், 12 ஆக இருந்த படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை, 14 ஆக உயர்த்தி ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. வரும், 17ம் தேதி முதல் இந்த ரயில், 14 படுக்கை வசதி, இரண்டு முன்பதிவில்லா பொது பெட்டி, நான்கு ஏ.சி. பெட்டிகளுடன் முஸாபர்பூர் எக்ஸ்பிரஸ் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளா, தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்வோர் பயன்பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us