UPDATED : ஜூன் 01, 2026 09:35 PM
ADDED : ஜூன் 01, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
ஜூன் 1ல், நடந்த கோவில்வழி அடுத்த அமராவதிபாளையம் கால்நடைச்சந்தைக்கு, 350 மாடுகள் வந்தன. கடந்த வாரம் பண்டிகை என்பதால், ஆயிரத்துக்கும் அதிகமாக கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நடப்பு வாரம் நிலை தலைகீழானது.
கேரளா மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து, 30க்கும் குறைவான வியாபாரிகளே வந்தனர். கால்நடைகள் விற்பனை இல்லாமல், திரும்ப அழைத்துச் செல்லப்பட்டன. அடுத்த சில வாரங்களுக்கு சீசன் சற்று மந்தமாகத்தான் இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
