ADDED : ஆக 20, 2025 10:36 PM

அ நிறம் | அளவு
திருப்பூர் செலிப்ரேஷன் ரோட்டரி சங்கம், மாதேஸ்வரி மருத்துவமனை, தி ஐ பவுண்டேசன் ஆகியவை இணைந்து சிறுபூலுவப்பட்டி மாநகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்காக பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது 420 மாணவர்களுக்கு கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
துாய்மைப் பணியாளர்கள் 45 பேருக்கு கையுறை மற்றும் காலணி, குடிநீர் வினியோகிப்பாளர் 6 பேருக்கு டார்ச் லைட் உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., விஜயகுமார், வார்டு கவுன்சிலர் தங்கராஜ், ரோட்டரி சங்க தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
