ADDED : ஆக 11, 2025 11:35 PM

அவிநாசி; திருமுருகன்பூண்டி சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி வித்யா மந்திர் பூரண சேவா ஆயுர்வேத மருத்துவமனை, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தின. மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
சுவாமி விவேகானந்தா அறக்கட்டளையின் தலைவர் எக்ஸ்லான் ராமசாமி, துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, பொருளாளர் சிவசண்முகம், வேணுகோபால், விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் சாமிநாதன், சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் சுரேந்தர் நாத், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அபிஷேக் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். முகாமில் 125 பேர் பங்கேற்று பயன் பெற்றனர். அதில், கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்பட்ட, 5 நபர்கள் திருப்பூர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.