/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரச்னைகளை எதிர்கொள்ளுங்க! மகளிர் தின விழாவில் அறிவுரை
/
பிரச்னைகளை எதிர்கொள்ளுங்க! மகளிர் தின விழாவில் அறிவுரை
பிரச்னைகளை எதிர்கொள்ளுங்க! மகளிர் தின விழாவில் அறிவுரை
பிரச்னைகளை எதிர்கொள்ளுங்க! மகளிர் தின விழாவில் அறிவுரை
ADDED : மார் 13, 2024 01:05 AM

பல்லடம்:பிரச்னைகளை எதிர்கொள்ள பழகிக் கொள்ளுங் கள் என, கல்லுாரியில் நடந்த மகளிர் தின விழாவில் மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் அருகே சின்னக்கரை பார்க்ஸ் கல்லுாரியில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். அறிவியல் துறை தலைவர் ஞானசெந்தில்குமார் முன்னிலை வகித்தார். தாளாளர் பிருந்தா கார்த்திக் விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில், மருத்துவர் திவ்யா பேசியதாவது:
இன்றைய சூழலில் பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். ஆனால், பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருந்தால் சாதிக்க முடியாது. அவற்றை எதிர்கொள்ள கற்றுக் கொண்டால், அதற்கு ஏற்ப நமது மனநிலை மாறிவரும்.
பின் நாளில் அதுவே பழக்கப்பட்டு, இடையூறுகளைத் தாண்டி வெற்றி பெற வழிவகுக்கும். எந்த ஒரு செயலையும் முடியாது என ஒதுக்காமல் வாழ்வில் சாதித்து காட்ட வேண்டும். வாய்ப்புகள் அனைத்தும் நம்மை தேடி வராது. நம்மிடம் உள்ள திறமைகளை தைரியமாக வெளிக்கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி குவெஸ்ட் பள்ளியின் தாளாளர் நிவேதா சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, பேச்சுப்போட்டி நடந்தது.

