/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராமரை இழிவுபடுத்தி 'பேஸ்புக்' பதிவு: தி.மு.க., நிர்வாகி மீது புகார்
/
ராமரை இழிவுபடுத்தி 'பேஸ்புக்' பதிவு: தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ராமரை இழிவுபடுத்தி 'பேஸ்புக்' பதிவு: தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ராமரை இழிவுபடுத்தி 'பேஸ்புக்' பதிவு: தி.மு.க., நிர்வாகி மீது புகார்
ADDED : ஜன 24, 2024 11:29 PM

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராஜ், அவருடைய 'பேஸ்புக்' பக்கத்தில், ராம பிரானை இழிவுபடுத்தும் வகையில், கருத்து பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு, பா.ஜ. மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜ.வினர், செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பா.ஜ. கட்சியினர், 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, செல்வராஜை கைது செய்ய வேண்டும் என, நேற்றுமுன்தினம் இரவு, பா.ஜ. மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள், மேற்கு போலீசில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, தேர்முட்டி பகுதியில், போராட்டத்தில் ஹிந்து அமைப்பினர் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, அனைவரையும் கலையச் சென்றனர்.
பா.ஜ. மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறுகையில், ''தி.மு.க., வெறுப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை அனைத்து மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ராம பிரானையும், ஹிந்து மதத்தையும் இழிபடுத்தும் வகையில் செல்வராஜ் கருத்து பதிவிட்டுள்ளார்.
இத்தகைய செயல் மதப் பிரச்னையை உருவாக்கும். அவரை கைது செய்ய வேண்டும்'' என்றார்.