/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலி டாக்டர் பார்த்த 'ஜோலி' வீட்டில் எங்கெங்கும் கிடந்த ஊசி மருந்து சோதனையிட்ட மருத்துவ துறையினர் அதிர்ச்சி
/
போலி டாக்டர் பார்த்த 'ஜோலி' வீட்டில் எங்கெங்கும் கிடந்த ஊசி மருந்து சோதனையிட்ட மருத்துவ துறையினர் அதிர்ச்சி
போலி டாக்டர் பார்த்த 'ஜோலி' வீட்டில் எங்கெங்கும் கிடந்த ஊசி மருந்து சோதனையிட்ட மருத்துவ துறையினர் அதிர்ச்சி
போலி டாக்டர் பார்த்த 'ஜோலி' வீட்டில் எங்கெங்கும் கிடந்த ஊசி மருந்து சோதனையிட்ட மருத்துவ துறையினர் அதிர்ச்சி
ADDED : ஜன 05, 2024 01:21 AM

திருப்பூர்;திருப்பூரில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் வீட்டில் சோதனையிட்ட போது, வீடு முழுவதும் ஊசி, மருந்து, மாத்திரைகள் குப்பை போல், குவிந்து கிடந்ததால், மருத்துவக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பூர், முருகம்பாளைம், சூரியகிருஷ்ணா நகரில் செயல்பட்டு வந்த பிரகாஷ் மெடிக்கல்ஸ் என்ற மருந்துக்கடையில் ஆய்வு நடத்திய, மாவட்ட மருத்துவ பணிகள் துறை, இணை இயக்குனர் குழு மருந்தகத்துக்கு 'சீல்' வைத்தது.
குழுவினர் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண், டாக்டரை பார்க்க வந்துள்ளார்.அப்பெண்ணிடம் மருத்துவ குழுவினர் விசாரித்த போது,' மருந்தகத்துக்குள் தனியறை, சிகிச்சையளிக்க படுக்கை இருப்பது தெரிய வந்தது. அந்த அறைக்குள் இருந்த மருந்துகளை பறிமுதல் செய்த குழுவினர், அதற்கும் 'சீல்' வைத்தனர்.
போலி டாக்டர் ஜோலி அகஸ்டியன் வீட்டுக்கு போலீசார், மருத்துவக்குழுவினர் சென்ற போது, வீட்டு சமையல் அறை உட்பட, எங்கு பார்த்தாலும், மருந்து, மாத்திரை, ஊசி குப்பை போல போட்டு வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, பயன்படுத்தப்பட்ட ஊசி, பாதி எடுக்கப்பட மருந்துகள், அட்டைபெட்டிகளில் குளுக்கோஸ் பாட்டில் கண்டறியப்பட்டது.
'வசந்தம் கிளினிக்' என்ற பெயரில், லேட்டர் பேடு அடித்துள்ள, போலி டாக்டர் ஜோலி அகஸ்டின், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், தான் சிக்கிக் கொள்ள கூடாது என்பதால், அது குறித்து அறிவிப்பு பலகையை மருந்தகம், வீட்டில் எந்த இடத்திலும் வைக்கவில்லை.
ஓவர் டைம்
வழக்கமாக கிளினிக்குகள் காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, மாலை, 5:00 முதல் இரவு, 9:00 மணி வரை செயல்படும். ஆனால், 'வசந்த் கிளினிக்' காலை, 8:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை செயல்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு, 150, பெரியவர்களுக்கு, 250 ரூபாய் 'பீஸ்' வாங்கி கொண்டு உடல்நிலை சரியில்லை என்றால், வீட்டிலேயே படுக்க வைத்து, குளூக்கோஸ் போட்டு அனுப்பி வைத்துள்ளார். போனில் அழைத்தால் நேரடியாக சென்று மருத்துவம் பார்க்க, மருந்துகள், ஊசி அடங்கிய, நான்கு பெரிய 'பிரீப்கேஸ்' வைத்துள்ளார். ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய தேவையான அளவில் அனைத்து பொருட்களும், அதிலிருப்பது கண்டு மருத்துவக்குழுவினரே அதிர்ந்து போயுள்ளனர்.
----
மளிகை பொருட்களை போல், வீட்டுக்குள் கிடந்த ஊசி மருந்து, மாத்திரைகள்.