ADDED : மார் 18, 2026 08:43 PM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலையில், பிரதான ரோட்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது.
உடுமலை, பழநி ரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரோட்டோர மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பல நாட்களாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
வணிக நிறுவனங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், சாய்ந்த நிலையிலுள்ள மின் கம்பத்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
