ADDED : மார் 19, 2026 05:12 AM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலையில், பிரதான ரோட்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, இதை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, பழநி ரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ரோட்டோர மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பல நாட்களாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதைக்கண்ட பொதுமக்கள், அச்சத்துடன் இந்த ரோட்டில் நடந்து செல்கின்றனர்.
வணிக நிறுவனங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், சாய்ந்த நிலையிலுள்ள மின் கம்பத்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே, மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
