/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூசணி விலை சரிவால் விவசாயிகள் கவலை
/
பூசணி விலை சரிவால் விவசாயிகள் கவலை
ADDED : செப் 22, 2024 11:45 PM

உடுமலை : உடுமலையில், பூசணிக்காய் கொள்முதல் விலை திடீர் சரிவால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், பரவலாக பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தாந்தோணி, துங்காவி, சின்னப்பன்புதுார் உள்ளிட்ட கிராமங்களில், ஆண்டுக்கு இரு சீசன்களில், பூசணி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
பூசணி சாகுபடிக்கான உகந்த நிலம், குறைந்த நீர் தேவை, தொழிலாளர் குறைந்தளவே தேவைப்படுவதாலும், நிலையான விலை இருப்பதாலும், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு விளையும் பூசணி, விற்பனைக்காக அதிகளவு வடமாநிலங்களுக்கும், கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. உடுமலை பகுதிகளில், தற்போது சாம்பல் பூசணி அறுவடை நடந்து வரும் நிலையில், தொடர் விலை சரிவால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
திருமணம் உள்ளிட்ட விேஷச நாட்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, கடந்த வாரம், கிலோ, 10 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது.
பண்டிகை சீசன் முடிந்துள்ளதால், தற்போது, கிலோ, 3 முதல், 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.