தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சரியும் தக்காளி விலையால் கவலை,  மகசூலும் பாதிப்பு 

சரியும் தக்காளி விலையால் கவலை,  மகசூலும் பாதிப்பு 

சரியும் தக்காளி விலையால் கவலை,  மகசூலும் பாதிப்பு 


UPDATED : ஆக 04, 2026 05:55 PM

ADDED : ஆக 04, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 05:55 PM ADDED : ஆக 04, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: பருவமழை இல்லாமல், மகசூல் குறைந்துள்ள நிலையில், சந்தைகளில் தக்காளி விலை சரிந்து வருவது உடுமலை பகுதி விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், ஆண்டு முழுவதும் கிணற்றுப்பாசனத்துக்கு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

கேரளாவுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இப்பகுதியில் இருந்து தக்காளி அனுப்புவதால், தக்காளி வர்த்தகத்தில் உடுமலை சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாமல் , கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது. நாற்று நடவு செய்த பிறகு போதிய மழை இல்லாததால், செடிகளின் வளர்ச்சி பாதித்தது.

வழக்கமாக ஏக்கருக்கு, பாரம்பரிய ரகங்கள், 10 முதல் 15 டன் வரையும், வீரிய ஒட்டு ரகங்கள் 25 முதல் 35 டன் வரையும் மகசூல் கிடைக்கும். இந்தாண்டு மழை இல்லாதது, அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால், தக்காளி மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் சந்தையில் விலை சரிந்து வருகிறது. உடுமலை தினசரி சந்தைக்கு, நேற்று 14 கிலோ கொண்ட, 15 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்து இருந்தது. பெட்டி, 180-200 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரம் பெட்டி 250 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருவது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us