/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு வரத்து இல்லாததால் சரியும் நீர்மட்டம்
/
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு வரத்து இல்லாததால் சரியும் நீர்மட்டம்
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு வரத்து இல்லாததால் சரியும் நீர்மட்டம்
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு வரத்து இல்லாததால் சரியும் நீர்மட்டம்
ADDED : பிப் 16, 2024 12:28 AM

உடுமலை;அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 20 நாளில், 13.39 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால், அணைக்கு நீர்வரத்து குறைந்து, பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது.
வட கிழக்கு பருவ மழையின், இறுதியில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, ஜன., 9ம் தேதி அணை நிரம்பியது.
பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், ஜன., 25 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் மார்ச் 15 வரை, 50 நாட்கள் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, ராமகுளம் முதல், கரூர் வலது கரை பாசன கால்வாய் வரை, 18 வாய்க்கால்களின் கீழ் பாசன வசதி பெறும், பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 29 ஆயிரத்து, 387 ஏக்கர் நிலங்களும்,புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 25,250 ஏக்கர் நிலங்களும் பயன்பெற்று வருகின்றன.
பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக, நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்று மதகு வழியாக, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து, பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த மாதம், 25ம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் போது,அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 89.57 அடியாக இருந்தது.
நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 76.18 அடியாகவும், நீர் இருப்பு, மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 2,866.90 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 14 கனஅடி நீர் வரத்து இருந்தது.
அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 758 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், கடந்த, 20 நாளில், அணை நீர்மட்டம், 13.39 அடி குறைந்துள்ளது.