ADDED : செப் 02, 2026 09:54 PM
பின்னலாடை துறையின் தடையில்லா வளர்ச்சிக்கு வாரியம் அமைய வேண்டும் என தொழில்துறையினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தனர். கடந்த, 2016ம் ஆண்டு முதல், நாங்களும் வலியுறுத்தி வந்தோம். அமைச்சர் அறிவித்துள்ளபடி தனித்துவமான பின்னலாடை வாரியம் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்க வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கயிறு, சில்க் வாரியத்தை விட, பத்து மடங்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரக்கூடிய பின்னலாடைக்கு, திருப்பூரில் வாரியம் அமைப்பது தான் சரியாக இருக்கும். அப்போது தான், ஆடை உற்பத்தியாளர்கள் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என ஒட்டுமொத்த தொழில்துறை சந்திக்கும் பிரச்னைகளை தெரிவித்து உடனுக்குடன் தீர்வு பெற முடியும். ஏற்றுமதி வர்த்தகம் 45 ஆயிரம் கோடி, உள்நாட்டு விற்பனைக்கான ஆடை உற்பத்தி 35 ஆயிரம் கோடி ரூபாய் என, 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை வர்த்தகம் நடந்து வருகிறது. தொலைநோக்கு பார்வையுடன், தமிழ்நாடு பின்னல் ஆடை வாரியம் திருப்பூரில் அமைத்தால் தான் சரியாக இருக்கும்.
– ஆடிட்டர் ராமநாதன்
திருப்பூர்
