/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கபடி ஜூனியர் அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா
/
மாவட்ட கபடி ஜூனியர் அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா
மாவட்ட கபடி ஜூனியர் அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா
மாவட்ட கபடி ஜூனியர் அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா
ADDED : நவ 23, 2024 05:43 AM

திருப்பூர், : மாநில கபடி போட்டிக்கு செல்லும், திருப்பூர் மாவட்ட ஜூனியர் கபடி அணிக்கு வழியனுப்பு விழா நடந்தது.
வேலுார் மாவட்டம், காட்பாடியில், மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 50வது மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி, கடந்த, 22ம் தேதி துவங்கியது. வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட அணி வீரர்களை வழியனுப்பு விழா, மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட ஜூனியர் அணி கேப்டனாக நிஷாந்த், பயிற்சியாளராக பிரகாஷ், மேலாளராக தண்டபாணி, நடுவர்களாக சிவகுரு, லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
முன்னதாக கபடி அணிக்கான டிராக் ஷூட், ஜெர்சி, ஷூ, பேக் உள்ளிட்ட உபகரணங்கள் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், மாநில கபடி பொருளாளருமான ஜெயசித்ரா சண்முகம், மாவட்ட பொருளாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தனர்.
புரவலர்கள் மணி, கோபால், துணைத்தலைவர்கள் ராமதாஸ், நாகராஜ், செய்தித் தொடர்பாளர் சிவபாலன், துணைச் செயலாளர்கள் வாலீசன், சின்னு, செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தேவராஜ், தங்கராஜ், மணிகண்டன், வளர்ச்சிக்குழு தலைவர் கார்லிக் ராஜ், தேர்வுக்குழு தலைவர் ருத்ரன், டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர் ரங்கசாமி, நடுவர்கள் தர்மராஜ், மருதை மற்றும் கபடிக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.