/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கபடி போட்டிக்கு செல்லும் சிறுமியர் அணிக்கு வழியனுப்பு விழா
/
மாநில கபடி போட்டிக்கு செல்லும் சிறுமியர் அணிக்கு வழியனுப்பு விழா
மாநில கபடி போட்டிக்கு செல்லும் சிறுமியர் அணிக்கு வழியனுப்பு விழா
மாநில கபடி போட்டிக்கு செல்லும் சிறுமியர் அணிக்கு வழியனுப்பு விழா
ADDED : பிப் 01, 2025 12:25 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் வாயிலாக, திருப்பூர் மாவட்ட மிக இளையோர் சிறுமிகளுக்கான தேர்வு நடைபெற்றது.
அதில், 12 சிறுமியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி முகாம், காங்கயம், நத்தாக்கடையூர், டெக்னாலஜி ஆப் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்றது. பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு வழியனுப்பு விழா, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஆகியவை, திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நடந்தது.
விழாவுக்கு, திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன், தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஜெய்சித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டு உபகரணங்களான டிராக் ஷூ, பேக், காலணி மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. சிறுமியர் அணியில் ஸ்ரீநிதி, சுவாஸ்கா, சவுமியா, பிரீத்தி, லக்ஸயா, பூஜா, வைசாலினி, வர்சினி, சுவேதா, கனிஷ்கா, பூமிகா, தேன்மொழி, பயிற்சியாளர் செந்தில்குமார், மேலாளர் பிரபு, நடுவர் லோகநாதன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர். தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக செயலாளர் சபியுல்லா, மாவட்ட கபடி கழக துணை சேர்மன் முருகானந்தம், மாவட்ட கபடி கழக துணை துலைவர்கள் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.