UPDATED : நவ 15, 2026 06:23 PM
ADDED : நவ 15, 2026 06:20 PM

அ நிறம் | அளவு
சேவூர்: சேவூர் அருகே தேனீக்கள் கொ்டடி படுகாயமடைந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தண்டுக்காரன்பாளையம் அடுத்த குமாரபாளையம் பெரியகாட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேஷ், 61; விவசாயி. தனது தோட்டத்தில் காய்ந்த தென்னை ஓலைகளை எரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட புகையால் அருகிலிருந்த மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்தது. தேனீக்கள் அவரை சூழ்ந்து கொட்டியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
முருகேஷ்.
