/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி விலை கடும் சரிவு ;விவசாயிகள் பாதிப்பு
/
தக்காளி விலை கடும் சரிவு ;விவசாயிகள் பாதிப்பு
ADDED : பிப் 16, 2024 01:32 AM

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
கேரளா மாநிலம் மறையூர், மூணாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது மற்றும் மழைப்பொழிவு காரணமாக, தற்போது தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தக்காளி தரமில்லாததாக மாறி, மகசூல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், உடுமலை சந்தையில் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் வரை, 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 600 முதல் 800 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், தற்போது கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று, ஒரு பெட்டி, 200 ரூபாய் வரை மட்டுமே விற்றது.
விவசாயிகள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, செடிகள் காய்ந்தும், காய்கள் வெளிர்நிறத்திற்கு மாறியும், பெருமளவு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விலையும் சரிந்து வருவதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.