sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மானிய உரம் பதுக்கல்; விவசாயிகள் கொதிப்பு

/

மானிய உரம் பதுக்கல்; விவசாயிகள் கொதிப்பு

மானிய உரம் பதுக்கல்; விவசாயிகள் கொதிப்பு

மானிய உரம் பதுக்கல்; விவசாயிகள் கொதிப்பு


ADDED : டிச 27, 2024 11:46 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ;''யூரியா மூட்டைகளை மானியத்தில் பெற்று, அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக, நிறுவனங்களுக்கு யூரியா விற்பதை தடுக்க வேண்டும்'' என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், வேளாண்துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷீலா பூசலெட்சுமி வரவேற்றார்.

கணினியில் மாறிய

கிராமத்தின் பெயர்

இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:

* விவசாயி ஞானபிரகாஷ்: கூட்டுறவு கடன் சங்கங்களில், இரண்டு லட்சம் ரூபாய் வரை, பயிர்க்கடன் வழங்கும் அறிவிப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆத்துக்கிணத்துப்பட்டி கிராமம் என்பது, கம்ப்யூட்டரில் ஆமந்தகடவு என்று மாறிவருகிறது; சரிசெய்ய வேண்டும்.

* உடுமலை விவசாயி மவுனகுருசாமி: ஊராட்சிகளில் இருந்து, குப்பை தொட்டி வைப்பதால், குப்பைகள் பி.ஏ.பி., வாய்க்காலில் விழுகின்றன. பன்றிகள் கூட்டமாக வந்து, மக்காச்சோளம், தென்னை மரங்களை அழைத்துசெல்கின்றன; விரைவாக அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். 'யூரியா' பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுாறு நாள் திட்டத்தில்

விவசாயப்பணிகள்

* தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாவட்ட செயலாளர் சின்னசாமி:

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை சேர்க்க வேண்டும்; பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் மிக குறைவாக இருக்கிறது; சீரமைக்க வேண்டும். குளத்தில் மீன் வளர்க்க ஆவன செய்ய வேண்டும்.

கொடியம்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்துக்கு தார் ரோடு வசதி செய்ய வேண்டும். குறு, சிறு விவசாயிகள், வசிக்கும் கிராமம் மட்டுமல்ல, தங்களது நிலம் உள்ள கிராமத்திலும் நுாறுநாள் திட்டத்தில் விவசாயப் பணிகளை செய்ய வழிவகை செய்ய வேண்டும். குன்னத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்.

உப்பாறு அணைக்கு

நீர் விட வேண்டும்

* தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து: பி.ஏ.பி., தொகுப்புகளில் மழை பெய்துள்ளதாலும், போதிய நீர் ஆதாரம் இருப்பதாலும், உப்பாறு அணைக்கு தண்ணீர் விட வேண்டும். வரப்பாளையம் கிராமத்தில், நத்தம் புறம்போக்கு நில ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும்.* தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ரமேஷ்:யூரியா மூட்டைகளை மானியத்தில் பெற்று, அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக, நிறுவனங்களுக்கு யூரியா விற்பதை தடுக்க வேண்டும்.

ஷட்டர் திறந்தே

இருக்க வேண்டும்

காங்கயம் விவசாயி ரத்தினசாமி: ஒரு சிலர் ஒரத்துப்பாளையம் அணை ஷட்டர்களை மூட வேண்டுமென கூறியுள்ளனர். எக்காரணம் கொண்டும், அணையின் ஷட்டர்களை மூடக்கூடாது; கோர்ட் உத்தரவுப்படி, ஷட்டர்கள் திறந்தே இருக்க வேண்டும்.

பாலாறு படுகை பாசன சங்க கூட்டமைப்பு செயலாளர் கோபால்:

மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க இருப்பதால், வேலை உறுதி திட்டத்தில் வாய்க்கால்களை தயார்படுத்த வேண்டும். நிர்வாக அனுமதி வழங்கிய, ஐந்து ரோடு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை விரைந்து துவக்க வேண்டும். முதியாநெரிசல் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறக்க வேண்டும். குள்ளம்பாளையத்தில் பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீர் கசிவை சரிசெய்ய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் குமார்:மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ள நிலையில், வியாபாரிகள் கூட்டு சேர்ந்து, விலையை குறைத்து வருகின்றனர்; குவின்டாலுக்கு, 100 ரூபாய் விலை குறைந்துள்ளது; நியாயமான விலை கிடைக்க வேண்டும். அணைப்பாளையம் குளத்தில் தண்ணீர் தேக்கியுள்ளதை சிலர் சட்ட விரோதமாக வெளியேற்றுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

விவசாயிகள் கோரிக்கை மற்றும் புகாரின் மீது, அந்தந்த துறை வாரியான அதிகாரிகள் பதில் அளித்தனர்.

---

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

சர்க்கரை ஆலையை மூடுவதா?

கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் பாலதண்டபாணி:அமராவதி சர்க்கரை ஆலையில், 21 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்; ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்யும் திறனுடன் உள்ளது. 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். இந்நிலையில், சர்க்கரை ஆலையை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவருவது வருத்தமாக இருக்கிறது; ஆலையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அமராவதியில் உள்ள ஒன்பது ஷட்டரில், இரண்டு ஷட்டர் பழுதாகியுள்ளது; விரைவில் சீரமைக்க வேண்டும். பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், வாய்க்கால்களை 100 நாள் திட்டத்தில் சுத்தம் செய்ய வேண்டும்.








      Dinamalar
      Follow us