/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னை பராமரிப்பில் விவசாயிகள் 'சுறுசுறு'
/
தென்னை பராமரிப்பில் விவசாயிகள் 'சுறுசுறு'
ADDED : செப் 25, 2024 12:19 AM

திருப்பூர் : கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல இடங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்; கடந்த நான்காண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், தோட்ட பராமரிப்பில் கவனம் செலுத்துவதை தவிர்த்தனர்.
விலையின்மையால் விவசாயிகள் தொய்வுற்ற நிலையில் தோட்ட பராமரிப்பு கேள்விக்குறியானது; இதனால், தேங்காய் விளைச்சலும் குறைந்தது. இந்நிலையில் நடப்பாண்டு விவசாயிகள் எதிர்பாராத வகையில் தேங்காய் விலை உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் தோட்ட பராமரிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
மரங்களுக்கு பாத்தி கட்டுவது, நீர் பாய்ச்சுவது, உரமிடுவது போன்ற பணிகளில் கவனம் செலுத்துகின்றனர். தென்னை சாகுபடிக்கும், அதிக விளைச்சலுக்கும் பொட்டாஷ், டி.ஏ.பி., மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரம் அவசியத் தேவையாக உள்ளது. உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை, தோட்டக்கலை துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.