/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழையை சூறையாடிய காட்டுப்பன்றிகள் சேதத்தால் விவசாயிகள் வேதனை
/
வாழையை சூறையாடிய காட்டுப்பன்றிகள் சேதத்தால் விவசாயிகள் வேதனை
வாழையை சூறையாடிய காட்டுப்பன்றிகள் சேதத்தால் விவசாயிகள் வேதனை
வாழையை சூறையாடிய காட்டுப்பன்றிகள் சேதத்தால் விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 07, 2025 08:50 PM

உடுமலை,; உடுமலை அருகே காட்டுப்பன்றிகள், வாழை உள்ளிட்ட சாகுபடிகளில், தொடர் சேதம் ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. வன எல்லையை ஒட்டிய பகுதிகளில், யானை, காட்டுப்பன்றிகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில்,உடுமலை அருகே குடிமங்கலம், மசக்கவுண்டன்புதுார் சுற்றுப்பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு, நுாற்றுக்கணக்கான ஏக்கரில், பல்வேறு சாகுபடிகள் மேற்கொண்டுள்ளன.
விவசாயி அப்புக்குட்டி, தென்னந்தோப்பில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து, வளர்ச்சி தருணத்தில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு விளைநிலத்தில், புகுந்த காட்டுப்பன்றிகள் வாழை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தி விட்டன. ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: மசக்கவுண்டன்புதுார் சுற்றுப்பகுதிகளில், காட்டுப்பன்றிகள் பிரச்னையால், காய்கறி மற்றும் இதர சாகுபடிகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தோட்டத்து சாளைகளில் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களையும் காட்டுப்பன்றிகள் தாக்க துவங்கியுள்ளன.
பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகளுக்கு நடவு செய்துள்ளோம். இப்பயிர்களை காப்பாற்ற வனத்துறை உதவ வேண்டும்.
தமிழக அரசு சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தபடி, வனத்துறை வாயிலாக காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, உடுமலை பகுதி விவசயிகள் எதிர்பார்க்கின்றனர்.