/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
/
நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : ஜூலை 24, 2025 08:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், அணை நிரம்பி, 40 நாட்களாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், பிரதானமாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் திறப்பை தொடர்ந்து, நாற்றங்கால் முறை, நேரடி நெல் விதைப்பு மற்றும் பாய் நாற்றங்கால் முறையில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அமராவதி ஆயக்கட்டு பகுதியில், பசுமை திரும்பியுள்ளது.