/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி.,-ல் மலைக்க வைத்த குப்பை அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்
/
பி.ஏ.பி.,-ல் மலைக்க வைத்த குப்பை அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்
பி.ஏ.பி.,-ல் மலைக்க வைத்த குப்பை அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்
பி.ஏ.பி.,-ல் மலைக்க வைத்த குப்பை அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்
ADDED : ஆக 20, 2024 11:10 PM

பொங்கலுார்:பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீருக்குப் பதிலாக குப்பை வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, ஆக., 18ல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாளாக பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் பயணித்த தண்ணீர் நேற்று காங்கயம் அருகே 'ஜீரோ பாயின்ட்' - ஐ சென்றடைந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் வாய்க்காலில் தண்ணீர் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.
வாய்க்காலில் தண்ணீரை விட குப்பைகளே அதிக அளவில் வந்ததை பார்த்து, விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். வாய்க்காலில் தண்ணீர் செல்வதை குப்பைகள் தடுத்ததால், 'ஜீரோ பாயின்ட்'-ல் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை.
ஒரு கி.மீ., நீளத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்தக் குப்பைகளில் காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், டையாபர்கள் கோழிக்கழிவுகள் நிறைந்திருந்தது. விவசாயிகள் இரண்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை மணிக்கணக்கில் அகற்றினர். அதன்பின்னரே, தண்ணீர் காங்கயம் வாய்க்காலில் சென்றது. தண்ணீர் தங்கள் பகுதி வாய்க்காலுக்கு வந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

