/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்முடியை பதவி நீக்கம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
/
பொன்முடியை பதவி நீக்கம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
பொன்முடியை பதவி நீக்கம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
பொன்முடியை பதவி நீக்கம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஏப் 11, 2025 11:33 PM
திருப்பூர்; கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
ஹிந்து சமுதாய மக்களை அவமானப்படுத்தும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் அமைச்சர் பொன்முடி மேடையில் பேசியுள்ளார். ஹிந்து மக்களை இவ்வளவு கேவலமாக இதுவரை யாரும் பேசியதில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், எந்த அமைச்சர் தவறு செய்தாலும், அடுத்த நிமிடமே அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து, ஜெ., துாக்கி வீசிவிடுவார்.
பொன்முடியை, முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கட்சிப்பொறுப்பிலிருந்து மட்டும் நீக்கினால் போதாது. இவர் அமைச்சராக இருப்பது தமிழகத்துக்கே வெட்கக்கேடான விஷயம்.
தமிழகத்தில் வசிக்கும் ஆறரை கோடி ஹிந்துக்களை கேவலப்படுத்திய, பொன்முடியை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். பொன்முடியின் இந்தப் பேச்சுக்கு, கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.