/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கைதானவர்கள் விடுவிப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : டிச 25, 2025 05:51 AM
திருப்பூர்: மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி, கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், விவசாயிகளும், பொதுமக்களும், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தினர்.
மாநகராட்சிக்கு தானமாக கொடுத்த, தர்ம தாயம் வகையை சேர்ந்த நிலத்தில், தர்ம சத்திரம் அமைத்து, அறம் சார்ந்த செயல்கள்தான் செய்யவேண்டும். அந்நிலத்தில், மாநகராட்சி குப்பைகளை கொட்டும்போது ஏற்பட்ட பிரச்னையில், விவசாயிகள், பொதுமக்களை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் தற்போது சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், இடுவாய் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அசாதாரண சூழலில் உள்ளனர்.
இது விஷயத்தில், கலெக்டர் நேரடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும். சின்னக்காளிபாளையத்தில் தர்ம தாயமாக பெறப்பட்ட நிலத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

