/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் கடனுக்கு 'சிபில் ஸ்கோர்' விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
/
பயிர் கடனுக்கு 'சிபில் ஸ்கோர்' விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
பயிர் கடனுக்கு 'சிபில் ஸ்கோர்' விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
பயிர் கடனுக்கு 'சிபில் ஸ்கோர்' விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
ADDED : ஜூன் 07, 2025 02:46 AM

பல்லடம்:'சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படும்' என்ற கூட்டுறவு துறை அறிவிப்புக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பல்லடத்தில், இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
விவசாயிகள், விவசாயத்தில் லாபம் பெற முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் இருப்பதால், தமிழக அரசு அவ்வப்போது பயிர் கடன் தள்ளுபடி செய்கிறது. தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாமல், விவசாயிகள், 'சிபில் ஸ்கோர்' பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும், சிபில் ஸ்கோரில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், தேசிய வங்கிகளிலும் இனி விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழல் ஏற்படும்.
விவசாயிகளின் புகலிடமாக உள்ள கூட்டுறவுத்துறை, சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.