/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பதுக்கல் தடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
/
பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பதுக்கல் தடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பதுக்கல் தடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பதுக்கல் தடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 28, 2025 11:38 PM

உடுமலை; பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பதுக்கலை தடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்தி, மானிய விலையில் உரம், இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். பொருளாளர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் வீரப்பன் துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் குமார், தாலுகா செயலாளர் பாலதண்டபாணி, துணைத்தலைவர் அருண்பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் நிலுவையிலுள்ள நல்லாறு, ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்றவும், பழுதடைந்துள்ள கால்வாய்களை சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தக்காளி விலை வீழ்ச்சியை தடுக்க, குளிர்பதன கிடங்கும், தக்காளி ஜாம், சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு உற்பத்தி தொழிற்சாலை உடுமலையில் அமைக்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு எளிதில் பயிர் கடன், நகைக் கடன் வழங்க வேண்டும்.
கால்நடை கிளை நிலையங்களில், தேவையான டாக்டர்கள் நியமித்து, பணி நேரத்தில் அவர்கள் இருப்பதை உறுதி செய்யவும், தேவையான மருந்துகள் இருப்பு வைக்கவும், நடமாடும் கால்நடை மருந்தகத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
சுய நிதி திட்டம், தட்கல், விவசாய மின் இணைப்பு கேட்டு, பணம் செலுத்தி பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும், உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.
யானை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, மயில், குரங்கு போன்ற வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டியும், மனித வனவிலங்கு மோதலை தடுத்தும் காட்டுப்பன்றியை, வனவிலங்கு பட்டியில் இருந்து நீக்க வேண்டும்.
வேளாண்மைக்கு தேவையான உரங்கள் பதுக்கலை தடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்தி, மானிய விலையில் உரம், இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு உரிய இடவசதி செய்தும், கூடுதலாக வசூலிக்கும் கமிசன் மற்றும் நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
திருமூர்த்தி அணை மற்றும் குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாத காலங்களில், தூர்வாரியும் ஆண்டு தோறும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.
கடுமையாக நோய் பாதித்துள்ள தென்னை மரங்களை அகற்றி, மறுநடவு செய்ய நிதியுதவி வழங்கியும், கொப்பரை கொள்முதலை தென்னை விவசாயிகளிடமிருந்து, ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.
திருமூர்த்திமலையிலுள்ள மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் புதிய நோய்களை தடுக்க ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.