/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகைக்கடன் கட்டுப்பாடு நிறுத்தம் விவசாய சங்கம் வரவேற்பு
/
நகைக்கடன் கட்டுப்பாடு நிறுத்தம் விவசாய சங்கம் வரவேற்பு
நகைக்கடன் கட்டுப்பாடு நிறுத்தம் விவசாய சங்கம் வரவேற்பு
நகைக்கடன் கட்டுப்பாடு நிறுத்தம் விவசாய சங்கம் வரவேற்பு
ADDED : ஜூன் 01, 2025 07:12 AM

பல்லடம் : நகைக்கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நிறுத்தப்பட்டதற்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: நகை கடன் பெறாமல் விவசாயிகள், பொதுமக்கள் குடும்பம் நடத்த முடியாது என்ற சூழல் உள்ளது. இதற்கிடையே, இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இதன்படி, நகைகளின் உரிமத்துக்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும் என்றும், நகைகளின் மதிப்பில், 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பதாக இருந்தது.
இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உடனடியாக கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகளும், தமிழக முதல்வர் மற்றும் மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் வைக்கப்படும் தங்க நகை கடன் களுக்கு இந்த நிபந்தனைகள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை கடன் தொடர்பான புதிய விதிமுறைகளால் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது. இதற்கு முன்பாகவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்கிறோம். மேலும், 2 லட்சம் ரூபாய்க்கு கீழான கடன்களுக்கு மட்டுமே நிபந்தனைகள் என்பதை, 3 லட்சம் ரூபாயாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.