ADDED : பிப் 17, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
பொங்கலுார்: மாசி, பங்குனி மாதம் கோடை காலத்தின் துவக்க காலம். சித்திரை, வைகாசி மாதங்களில் அக்னி நட்சத்திரம் கொளுத்தும்.
கடுமையான வெயில் வாட்டுவதால் மெலிதான தண்டுகளை உடைய தக்காளி செடியின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். வெயிலை சமாளித்து செடி வளர்ந்தாலும் பூக்கள் இருக்காது. தற்பொழுது தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. கோடை காலத்தில் இது நேர் எதிராக இருக்கும். நல்ல விலை கிடைக்க வாய்ப்பு இருந்தாலும் சாகுபடி செய்தால் நஷ்டம் ஏற்படவே அதிக வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயிகள் மாசி பட்டத்தில் தக்காளி சாகுபடி செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
