/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டடத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
/
குண்டடத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 18, 2024 01:58 AM

திருப்பூர்:ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி குண்டடத்தில் விவசாயிகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ரேஷன் கடைகளில் இறக்குமதி பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய், கடலை எண்ணெய் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளனர். இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சென்னையில் தென்னை விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், குண்டடம், பெல்லம்பட்டி, மருதுார் ஆகிய இடங்களில் தோட்டங்களில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.