/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்பாசி சட்டம் தவறான பயன்பாடு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
/
சர்பாசி சட்டம் தவறான பயன்பாடு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
சர்பாசி சட்டம் தவறான பயன்பாடு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
சர்பாசி சட்டம் தவறான பயன்பாடு கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
ADDED : மே 31, 2024 03:16 AM
திருப்பூர்: ''சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல் பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், பல்லடம், அவிநாசி, திருப்பூர் சாமளாபுரம், காங்கேயம், ஊத்துக்குளி, தாராபுரம், சூலுார் பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய குடும்பத்தினர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து நேற்று மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
பணம் மதிப்பிழப்பு, கொரோனா தொற்று காரணமாக, திருப்பூர், கோவை மானட்டங்களில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. போதிய மழையின்றி, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு, சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி, விவசாய நிலங்களை குறைந்த மதிப்பீடு செய்து கையகப்படுத்துகின்றன. வங்கி அதிகாரிகள், விவசாய பூமிகளையும், நிலங்களையும், நான்கில் ஒரு பங்கு என்கிற அடிப்படையில் மிக குறைவாக மதிப்பீடு செய்து, விற்பனை செய்கின்றனர். வங்கிகளின் இத்தகைய தவறானபோக்கால், அவிநாசி, மங்கலம், பல்லடம், காங்கேயம், சாமளாபுரம், அன்னுார், ஊத்துக்குளி, சோமனுார் பகுதி விவசாயிகள், மனவேதனை அடைந்துள்ளோம். சர்பாசி சட்டம் பிரிவு 31ஐ-ன்படி, விவசாய நிலங்களை ஏல விற்பனை செய்யக்கூடாது என்கிற சட்ட விதி, மீறப்படுகிறது. தவறான வகையில் சொத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; விவசாயிகளையும், விவசாய குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.