/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொரியல் தட்டை விலை சரிவு விவசாயிகள் கவலை
/
பொரியல் தட்டை விலை சரிவு விவசாயிகள் கவலை
ADDED : டிச 11, 2025 05:02 AM

உடுமலை: கேரள வியாபாரிகள் வருகை குறைவால், பொரியல் தட்டை விலை உடுமலை சந்தையில், தொடர்ந்து சரிந்து வருகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக பொரியல் தட்டை சாகுபடி செய்யப்படுகிறது. கேரள மாநிலமே பொரியல் தட்டைக்கு பிரதான சந்தையாக உள்ளது.
எனவே, அம்மாநில வியாபாரிகள் நேரடியாகவும், உடுமலை உள்ளிட்ட சந்தைகளிலும், பொரியல் தட்டையை கொள்முதல் செய்வது வழக்கம்.
பருவமழை துவங்கியதும், சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டு, விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாறாக, உடுமலை சந்தையில் பொரியல்தட்டை கிலோ, 40 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த வாரங்களில், கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனையானது.
விவசாயிகள் கூறுகையில், 'பொரியல் தட்டைக்கு, தேவை குறைந்துள்ளதால், கேரள வியாபாரிகள் வருவதில்லை. இதனால், விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, சரிந்து வருகிறது. கிலோ 40 ரூபாய்க்கு கீழே சென்றால், நஷ்டம் ஏற்படும்,' என்றனர்.

