ADDED : மே 24, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
பொங்கலுார்: இந்த ஆண்டு கோடை மழை பெய்திருந்தால் முருங்கை சீசன் பங்குனி மாதத்துடன் முடிந்திருக்கும். சித்திரை மாதத்தில் பெய்ய வேண்டிய கோடை மழை பொய்த்துப் போனதால் முருங்கை பூக்கள் உதிராமல் காய்களாக மாறியது.
எனவே, வைகாசி மாதம் துவங்கியும் இன்னும் முருங்கை வரத்து இருந்து கொண்டே இருக்கிறது. வைகாசி மாதம் துவங்கியும் சந்தைக்கு முருங்கை வரத்து குறையாமல் வருகிறது. இதனால், சொற்ப விலையே கிடைத்து வருகிறது. பிற பயிர்களுக்கு மழை பெய்தால் தான் விளைச்சல் அதிகரிக்கும். ஆனால், முருங்கை மட்டும் மழை பெய்யாததால் விளைச்சல் அதிகரித்து விலை சரிந்துள்ளது.
