/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 31, 2024 11:55 PM

திருப்பூர் : 'திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர்.
மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமை வகித்தார். சப் கலெக்டர் சவுமியா, வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மனு அளித்தனர்; பிரச்னைகளை சுட்டிக்காட்டி கூட்டத்தில் பேசினர்.
மனோகரன், விவசாயி: பிரதமரின் கிஷான் திட்டத்தில் பயனாளி விவசாயிகளை இணைப்பதில், குளறுபடிகள் நடக்கின்றன. தகுதியுள்ள விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், பி.ஏ.பி., பாசன பகுதிகள் வறட்சி நிலையில் உள்ளன; பாசனத்துக்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும்?
அதிகாரிகள்: கிஷான் திட்டத்தில், உரிய ஆவ ணங்கள் இணைக்கப்படாததாலேயே, விவசாயிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. விவசாயிகள், போதுமான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 12ம் தேதி பி.ஏ.பி., தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளோம்.
காளிமுத்து, தலைவர், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்:
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், தாராபுரம் உப்பாறு அணை, வறட்சிப் பிடியில் உள்ளது. அரசூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், 18 தடுப்பணைகள் நிரம்பி, உப்பாறு அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்.
உப்பாறு வாய்க்காலுடன் பி.ஏ.பி., வாய்க்கால் இணைப்பு திட்ட பணிகள் நிறைவடைந்துவிட்டன. புதிதாக வெட்டப்பட்ட இடது, வலது வாய்க்கால் மூலம், உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர் திறக்கவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில், பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் செயல்பாடு திருப்திகரமாக இல்லை; அந்த துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் பணியிடமாறுதல் செய்து, சீர்திருத்தம் செய்யவேண்டும்.
ஞானபிரகாசம், தலைவர், தென்னை விவசாயிகள் சங்கம்:
உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கடந்த நான்கு மாதங்களாக விவசாயிகள் குறைகேட்பு கூட் டம் நடத்தப்படவில்லை. குறைகளை தெரிவிக்க, தொலைதுாரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்குதான் வரவேண்டியுள் ளது. கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தை மாதந்தோறும் தடையின்றி நடத்த வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி:
திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. மானாவாரி பயிர்கள் கருகிப்போய்விட்டன. திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும்.
அமராவதி அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், விவசாயிகளால் ஒரே சீராக நடவுப்பணி மேற்கொள்ள முடியவில்லை. ஏழு நாள் தண்ணீர்; ஏழு நாள் நிறுத்தம் என்ற அடிப்படையில், அமராவதியில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு, வரும் மார்ச் 15ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு 120 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.
தாராபுரம், கரூர் பாசன சபை பிரதிநிதிகளை அழைத்துப்பேசி, தண்ணீர் அளவை குறைத்து, கூடுதல் நாட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி விவசாய அமைப்பினர் பேசினர்.