ADDED : ஜூன் 20, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 27ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக, அறை எண் 240ல், கலெக்டர் தலைமையில் நடக்கிறது.
இதில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வசதியாக, வேளாண்துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்ட வேளாண் உதவிமையம் அமைக்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.