/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவரைக்கு நிலையான விலை விவசாயிகள் மகிழ்ச்சி
/
அவரைக்கு நிலையான விலை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 23, 2025 07:17 AM
உடுமலை: தேவை அதிகரித்து, அவரைக்கு நிலையான விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை பகுதியில் கிணற்றுப்பாசனத்தில், சொட்டு நீர் பாசன முறை அமைத்து, பல்வேறு காய்கறி சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய தொழில்நுட்பங்களால், அனைத்து சீசன்களிலும், காய்கறி இப்பகுதியில், உற்பத்தியாகிறது. அவ்வகையில், அவரை, வெண்டை, கத்தரி, தக்காளி, சின்னவெங்காயம் சாகுபடி பரவலாக தற்போதைய சீசனில், மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்கழி மாதம் என்பதால், காய்கறிகளுக்கு சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. அவ்வகையில் அவரையை, நேரடியாக விளைநிலங்களில் கொள்முதல் செய்கின்றனர். உடுமலை உழவர் சந்தையில், கிலோ 70-80 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அறுவடை சீசனிலும், நிலையான விலை கிடைப்பதால், இச்சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பனிப்பொழிவு அதிகரிப்பால், விளைச்சல் தற்போது பாதித்துள்ளது; விரைவில் சீதோஷ்ண நிலை சீராகி, விளைச்சலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

