/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாரச்சந்தை யை புதுப்பிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வாரச்சந்தை யை புதுப்பிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வாரச்சந்தை யை புதுப்பிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
வாரச்சந்தை யை புதுப்பிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 26, 2024 11:32 PM
உடுமலை : ராமச்சந்திராபுரத்தில், பரிதாப நிலையிலுள்ள வாரச்சந்தை வளாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரத்தில், வாரச்சந்தை அமைந்துள்ளது.இச்சந்தையை அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், கரியன்சாளை, விருகல்பட்டி உட்பட பல கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்; விவசாயிகளும், தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தி வந்தனர்.
வாரத்தில், ஒரு நாள் மட்டும் சந்தை செயல்பாட்டில் இருப்பதால், பிற நாட்களில், வளாகத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்; சமூகவிரோதிகளால், கடைகளுக்கான கட்டமைப்பும் சேதப்படுத்தப்பட்டது.
கடந்த, 2015ல், ஒன்றிய பொதுநிதியின் கீழ் சந்தை மேம்படுத்தப்பட்டு, மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, உட்பகுதியில், புதர் மண்டி காணப்படுகிறது. பல கிராம மக்கள் பயன்பெறும் வகையில், அங்கு புதுப்பிப்பு பணிகளை, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.