/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயல்படாத மின் இணைப்பு; விவசாயிகள் யோசனை
/
செயல்படாத மின் இணைப்பு; விவசாயிகள் யோசனை
ADDED : மே 12, 2025 03:52 AM
பொங்கலுார்; தமிழகம் முழுவதும் பல இடங்களில் விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு, வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
வீட்டுமனை விற்பனை செய்யப்பட்டாலும் விவசாய நிலத்தில் இருந்த இலவச மின் இணைப்பு பல இடங்களில் அப்படியே தொடர்கிறது. பயன்பாட்டில் இல்லாத இலவச மின் இணைப்பும் கணக்கில் சேர்வதால், மின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மின் பற்றாக்குறையை காரணம் காட்டி பத்து ஆண்டுகள் முன் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கூட இலவச மின் இணைப்பு கொடுக்காமல் அரசு நிலுவையில் வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத இலவச விவசாய மின் இணைப்புகளை மொத்தமாக கணக்கெடுத்து, அவற்றை மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.