ADDED : மார் 27, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; பொங்கலுார் வட்டாரம் விவசாயம் சார்ந்த பகுதி. மின் தேவையும் அதிகரித் துள்ளதால், பல இடங்களில் குறைவழுத்த மின்சாரம் கிடைக்கிறது.
நகர் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புற பகுதிகளை கண்டு கொள்வதில்லை என்றும், மின்மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக பெருந்தொழுவு மின்வாரிய அலு வலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இப்பிரச்னை தீவிரமாக உள்ளதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.